பெற்றோர் கொலை: மாயமான சிறுமியைத் தேடி வேட்டை | தினகரன்

பெற்றோர் கொலை: மாயமான சிறுமியைத் தேடி வேட்டை

பெற்றோர் கொல்லப்பட்டபின் காணாமல்போன 13 வயது சிறுமியை அமெரிக்காவின் விஸ்கன்சின் மாநில அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அந்த சிறுமியின் பெற்றோர், ஜேம்ஸ் மற்றும் டெனிஸ் க்லாஸ் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டுபிடித்துள்ள பொலிஸார், அச்சிறுமியும் தற்போது ஆபத்தை எதிர்கொண்டிருக்கலாம் என்று கருதுகின்றனர்.

அவசர உதவி எண்ணான 911இன் தரவுகளின்படி, தாக்குதல் நிகழ்ந்தபோது அச்சிறுமி வீட்டில் இருந்தது தெரியவந்துள்ளது. கொலையில் அச்சிறுமி மீது சந்தேகம் இல்லையென அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Add new comment

Or log in with...