உலகின் மிகப்பெரிய ஆளில்லா விமானம் சீனாவில் சோதனை | தினகரன்

உலகின் மிகப்பெரிய ஆளில்லா விமானம் சீனாவில் சோதனை

போக்குவரத்துக்கான உலகின் மிகப்பெரிய ஆளில்லா விமானத்தை சீனா வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்துள்ளது.

எப்.எச் 98 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமானத்தை சீனாவின் ஏரோஸ்பேஸ் மின்னணு தொழில்நுட்பக் கழகம் தயாரித்துள்ளது. 1.5 தொன் எடை கொண்ட பொருட்களை இந்த விமானம் சுமந்து செல்லும் திறன் பெற்றது.

4 ஆயிரத்து 500 மீற்றர் உயரத்தில் மணிக்கு 180 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லும் வல்லமை பெற்றது எப்.எச் 98 ஆளில்லா விமானம். இதை, வடக்குப் பகுதியில் உள்ள பாவ்ட்டா சோதனைத் தளத்தில் வைத்து சீனா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.


Add new comment

Or log in with...