விலங்குகளை மோசமாக பராமரித்தவர்கள் கைது | தினகரன்

விலங்குகளை மோசமாக பராமரித்தவர்கள் கைது

ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் மோசமான முறையில் வனவிலங்குகளை பராமரித்த உயிரியல் பூங்கா நிர்வாகிகளை கைது செய்ய அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

பியர் என்ற இடத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் விலங்குகளை சரிவர கவனிக்காததால், அவை நோய்வாய்ப்பட்டு கிடப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து உயிரின பூங்காவின் நிர்வாகிகளை கைது செய்ய உத்தரவிட்ட அந்நாட்டு அமைச்சர், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள வன உயிரினங்களை வேறிடங்களுக்கு மாற்றவும் நடவடிக்கை மேற்கொண்டார்.

தனியாருக்குச் சொந்தமான இந்த உயிரியல் பூங்காவில் இருக்கும் சங்கம் உட்பட விலங்குகள் மோசமான நிலையில் இருக்கும் புகைப்படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...