144 ஆண்டு தபால் உடன்படிக்கையில் இருந்து விலக அமெரிக்கா திட்டம் | தினகரன்

144 ஆண்டு தபால் உடன்படிக்கையில் இருந்து விலக அமெரிக்கா திட்டம்

சீன கப்பல் பொருட்கள் நியாயமற்ற முறையில் குறைந்த விலையில் உள்ளதாக குற்றம்சாட்டும் அமெரிக்கா 144 ஆண்டுகள் பழமையான தபால் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் திட்டத்தை வெளியிட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையின் கீழ் குறிப்பிட்ட நாடுகளின் பொதிகளுக்கு குறைவான சர்வதேச விலை நிர்ணயிக்கப்படுகிறது. வறிய நாடுகளுக்கு ஆதரவாகவே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.

எனினும் இந்த விலைக் கழிவு அமெரிக்க வர்த்தகத்திற்கு பாதகமாக உள்ளதாக அந்த நாடு குறிப்பிட்டுள்ளது.

சிறந்த உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு களமாக இந்த உடன்படிக்கையில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

“நாம் நியாயமான முறை ஒன்றை எதிர்பார்த்துள்ளோம்” என்று சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

சீனா 1969 ஆம் ஆண்டு இந்த தபால் ஒப்பந்தத்தில் இணையும்போது இருந்த அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற நிலையை கைவிடுவதற்கு அமெரிக்கா இந்த அழுத்தத்தை கொடுப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.

சர்வதேச தபால் விலையை உலக தபால் ஒன்றியமே கட்டுப்படுத்துகிறது. இது 1870களில் இருந்து இயங்கி வருகிறது. இதன்படி அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் பொதிகளுக்கு மானிய விலை வழங்கப்படுவதோடு அமெரிக்கா உட்பட செல்வந்த நாடுகளுக்கு அதிக விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த முறையால் உலகில் பெரும் ஏற்றுமதி நாடுகளில் ஒன்றான சீனா அதிக இலாபம் ஈட்டுவதாக வெள்ளை மாளிகை குறிப்பிடுகிறது.


Add new comment

Or log in with...