Thursday, March 28, 2024
Home » நாவலப்பிட்டியில் உயர் தொழில்நுட்ப கல்லூரி
650 மில்லியன் ரூபா செலவில்

நாவலப்பிட்டியில் உயர் தொழில்நுட்ப கல்லூரி

by damith
December 5, 2023 10:49 am 0 comment

நாவலப்பிட்டி உயர் தொழில்நுட்ப கல்லூரி 650 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு மாணவர்களின் பாவனைக்காக அண்மையில் கையளிக்கப்பட்டது.

உயர் தொழில்நுட்ப கல்லூரி நிறுவனம் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் பங்கேற்புடன் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

650 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் 2000 மாணவர்கள் கல்வி கற்கும் வசதிவாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாவலப்பிட்டி உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஹோட்டல் முகாமைத்துவம் டிப்ளோமா, விவசாய தொழில்நுட்பத்தில் தேசிய டிப்ளோமா, ஆங்கிலத்தில் தேசிய டிப்ளோமா, தமிழ் மொழி தேசிய டிப்ளோமா ஆகிய தகமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்நிகழ்வில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க, உயர் தொழில்நுட்ப பணிப்பாளர், பல்கலைக்கழக ஆணைக்குழுவின் உப தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, சமிந்திரனி கிரியெல்ல மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

(நாவலப்பிட்டி சுழற்சி நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT