யாழ் - திருமலை பஸ்ஸில் 1,670 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது | தினகரன்

யாழ் - திருமலை பஸ்ஸில் 1,670 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

யாழ் - திருமலை பஸ்ஸில் 1,670 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது-Two Arrested with 1,670 Drug Tablets
(வைப்பக படம்)

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்றில் மேற்கொண்ட சோதனையின்போது 1,670 போதைப் பொருளுள் மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (19) அதிகாலை 2.05  மணி ஓமந்தை சந்தியிலுள்ள சோதனைச்  சாவடியில் கடமையிலிருந்த ஓமந்தை  பொலிஸ் அதிகாரிகளால் குறித்த தனியார் பஸ்ஸில் மேற்கொள்ளப்பட்ட  சோதனையின் போது அதிலிருந்த இருவரிடமிருந்து இவ்வாறு போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

திருகோணமலையைச் சேர்ந்த 25 மற்றும் 23 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் இன்று (19) வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...