முன்னாள் DIG நாலக்க டி சில்வா இன்றும் CID யில் | தினகரன்

முன்னாள் DIG நாலக்க டி சில்வா இன்றும் CID யில்

முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வா, இன்றும் (19) குற்றவியல் விசாரணை திணைக்களம் (CID) முன்னிலையானார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம்  தீட்டியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் வாக்குமூலம் பெறுவதற்காக, அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினமும் (18) அவர்  குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியிருந்ததோடு அவரிடம் சுமார் 9 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அவரை இன்றைய தினமும் (19) அங்கு முன்னிலையாகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...