கோத்தாபய ராஜபக்‌ஷ விசேட மேல் நீதிமன்றில் முன்னிலை | தினகரன்

கோத்தாபய ராஜபக்‌ஷ விசேட மேல் நீதிமன்றில் முன்னிலை

கோத்தாபய ராஜபக்‌ஷ விசேட மேல் நீதிமன்றில் முன்னிலை-Gotabaya Appeared Before Special High Court

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச இன்று (19)  மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

தங்காலை, வீரகெட்டிய, மெதமுலானையிலுள்ள டி.ஏ. ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியக நிர்மாணத்தில், ரூபா 33 மில்லியன் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை உள்ளிட்ட பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழான 07 குற்றப்பத்திரிகைகளின் கீழ், கடந்த ஓகஸ்ட் 24 ஆம் திகதி, சட்ட மாஅதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட  வழக்கு தொடர்பிலேயே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

குறித்த வழக்கின் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட  ஏழு பேர் கடந்த செப்டம்பர் 10ஆம் திகதி முதல் முறையாக மூவர் அடங்கிய விஷேட மேல் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

இதன்போது அவர்களிடம் குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டது.

அதற்கமைய, கடந்த ஒக்டோபர் 09 ஆம் திகதி குறித்த வழக்கு தொடர்பில் அவர் இறுதியாக முன்னிலையாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...