முன்னாள் பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா CID யில் | தினகரன்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா CID யில்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா CID யில்-DIG Nalaka De Silva at CID to Give Statement

முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வா, இன்று (18) காலை குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் (CID) முன்னிலையானார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம்  தீட்டியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் வாக்குமூலம் பெறுவதற்காக, அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் மத்திய ஆயுத களஞ்சியத்திலிருந்து, தீவிரவாத விசாரணைப் பிரிவுக்கு (TID) வழங்கப்பட்ட எல்.எம்.ஜி. (Light Machine Gun) வகை துப்பாக்கிகள் இரண்டு காணாமல்  போன விடயம் தொடர்பிலும் அவரிடம் வாக்குமூலம்  பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா, பணி நீக்கப்பட வேண்டும் என, சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார முன்வைத்த முன்மொழிவுக்கு அமைய, தேசிய பொலிஸ் ஆணைக்குழு அதற்கான அனுமதியை நேற்று (17) வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...