கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 17 மணி நேர நீர் வெட்டு | தினகரன்

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 17 மணி நேர நீர் வெட்டு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 17 மணி நேர நீர் வெட்டு-17 Hr Water Cut for in Colombo and Suberp

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்த பணி காரணமாக, கொழும்பின் சில பிரதேசங்களில் இன்று (19) நண்பகல் 12 மணியிலிருந்து நாளை (20) அதிகாலை 5.00 மணி வரையான 17 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதற்கமைய கொழும்பு 05 (நாராஹேன்பிட்டி), கொழும்பு 07 (கறுவாத்தோட்டம்), கொழும்பு 08 (பொரளை) மற்றும் கோட்டை மாநகரசபை பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுலில் இருக்கும் என சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த காலப் பகுதியில் கொழும்பு 06 (வெள்ளவத்தை), மஹரகம, பொரலஸ்கமுவ நகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில், குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சபை அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...