பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா விஜயம் | தினகரன்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா விஜயம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா விஜயம்-PM Ranil Leave for India
பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த ஓகஸ்ட் மாதம் இறுதியில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்த போது...

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (18) பிற்பகல் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா நோக்கிப் புறப்பட்டார்.

இவ்விஜயத்தின் போது நாளை மறுதினம் (20)  இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.

இவ்வுத்தியோகபூர்வ விஜயத்தின்போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அந்நாட்டின் சிரேஷ்ட தலைவர்கள் சிலரையும் அவர் சந்திக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.


Add new comment

Or log in with...