திமுக மீதான வழக்குகள் அனைத்தும் பொய்யானவை | தினகரன்

திமுக மீதான வழக்குகள் அனைத்தும் பொய்யானவை

திமுக மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் பொய்யானவை என அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுராந்தகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், முதல்வர் தனது துறையை பயன்படுத்தி தனது உறவினர்களுக்கு ஒப்பந்தங்கள் தந்திருக்கிறார். முகாந்திரம் இருப்பதாக கூறிய உயர்நீதிமன்றம், சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.3 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. உத்தரவு வெளியான உடனே முதல்வர் ராஜினாமா செய்து வழக்கை சந்தித்திருக்க வேண்டும். இதுவரை ஊழல் வழக்கில் திமுக தண்டனை பெற்றது இல்லை.

எங்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் பொய்யானவை. 2 ஜி பொய் வழக்கில் நீதிமன்றம் அனைவரையும் விடுவித்து தீர்ப்பளித்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...