வன்முறைகளுக்கு பக்தர்கள் காரணம் அல்ல | தினகரன்

வன்முறைகளுக்கு பக்தர்கள் காரணம் அல்ல

சபரிமலையில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு பக்தர்கள் காரணம் அல்ல என தலைமை தந்திரி கன்டராரு ராஜீவாரு தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் தற்போது நிலவும் சூழல் குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் விதிக்கப்பட்டுள்ள சட்ட திட்டங்கள், விதிமுறைகளை மட்டுமே உச்ச நீதிமன்றம் யோசிக்கிறது. காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் பழக்கங்களையோ பாரம்பரியத்தையோ பார்க்கவில்லை. பழைய பாரம்பரிய முறைகளே தொடர வேண்டும் என்று தான் பெரும்பாலான பக்தர்கள் இப்போதும் விரும்புகிறார்கள். பழங்கால, பாரம்பரிய முறைகளே தொடர வேண்டும் என்பது தான் எனது ஒரே எண்ணம்.

தற்போது நிலவுவது மிகவும் ஆபத்தான சூழ்நிலை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பின் பெரும்பாலான பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சபரிமலை கோயிலில் பழைய நடைமுறைகள், பாரம்பரிய விதிகளை தொடர வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த வன்முறையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த வன்முறையில் பக்தர்கள் ஈடுபடவில்லை. வேறு யாரோ தான் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


Add new comment

Or log in with...