‘கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய கட்சி | தினகரன்

‘கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய கட்சி

‘அவர் ஒரு தீய சக்தி’: கமல்- ராஜேந்திரபாலாஜி மோதல்

கமலின் கட்சி கருவிலேயே கலைக்கப்படவேண்டிய கட்சி என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சிக்க அவர் ஒரு தீய சக்தி என கமல் விமர்சிக்க அரசியல் சூழல் பரபரப்படைந்துள்ளது.

நடிகர் கமல்ஹாசனுடன் அதிமுக அமைச்சர்கள் தொடர்ந்து வார்த்தைப்போரில் ஈடுபட்டு வரும் நிலையில் கன்னியாகுமரி, நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி “நடிகர் கமல்ஹாசன் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை, அது வளர்ந்தால் தமிழகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் பெரும் ஆபத்து” என்று விமர்சித்தார்.

நடிகர் ரஜினிகாந்துக்கு சான்றிதழ் கொடுத்த அவர் ரஜினிகாந்த் நேர்மையான வழியில் செல்பவர், ஆன்மீகவாதி என்று கூறினார். மாற்றுத்திறனாளிகள் என அழைக்கும் காலத்தில் அமைச்சர் ஊனமுற்றோரை பற்றி குறிப்பிடும் வார்த்தை பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில் இது குறித்து கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அப்போது அவர் கூறியதாவது:

மக்கள் நீதி மய்யம்கருவிலேயேகலைக்கப்படவேண்டியசப்பாணிகுழந்தை, அதுவளர்ந்தால்தமிழகத்திற்கும்தமிழ்மக்களுக்கும்பெரும் ஆபத்து என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியுள்ளாரே?

அது அவர் கருத்து, கருக்கலைப்பு பற்றியெல்லாம் அவர் பேசுவதை பெண்கள் பார்த்துக்கொண்டிருப்பார்கள், அதை பெண்கள் ரசிக்க மாட்டார்கள். எப்படி பாலில் கலப்படம் செய்தால் சுவைக்காதோ அதே போன்றுதான் இதுவும்.

வெளிநாட்டு தீய சக்திகளுடன் தொடர்பு இருக்கிறது என்று சந்தேகம் இருப்பதாக கூறுகிறாரே?

அது அவருடைய சந்தேகம், அவருக்கு ஆயிரம் சந்தேகம் உண்டு. அவரே ஒரு தீய சக்திதான்.

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...