தமிழர்களை இழிவுபடுத்தி சித்து பேசியதற்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் -தமிழிசை | தினகரன்

தமிழர்களை இழிவுபடுத்தி சித்து பேசியதற்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் -தமிழிசை

‘‘தமிழர் கலாசாரம் பற்றி பஞ்சாப் அமைச்சர் சிதது கூறிய கருத்துக்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று தமிழக பாஜ தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சர் சித்து, தமிழ் மொழி, தமிழ் பண்பாடு, கலாச்சாரம், உணவு பழக்கத்தை பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு பேசியதை கண்டித்து சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமை வகித்தார். இதில் சித்துவை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

பின்னர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது: பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சர் சித்து, தமிழ் மொழி, பண்பாட்டை இழிவுபடுத்தும் விதமாக பேசியுள்ளார். இதுபற்றி தமிழக அரசியல் கட்சியினர் எவரும் அவருக்கு எதிராக ஒருவார்த்தையும் பேசவில்லை. இந்த சம்பவத்துக்காக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். வட இந்தியாவையும் தென் இந்தியவையும் அவரது பேட்டியில் பிரிப்பதாக உள்ளது. இவ்வாறு தமிழிசை கூறினார்.


Add new comment

Or log in with...