எத்தியோப்பிய அமைச்சரவையில் சரிபாதியாக பெண்கள் நியமனம் | தினகரன்

எத்தியோப்பிய அமைச்சரவையில் சரிபாதியாக பெண்கள் நியமனம்

எத்தியோப்பிய பிரதமர் அபீ அஹமத் தனது அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சர் உட்பட பாதி அளவான பெண்களை நியமித்துள்ளார். ‘ஆண்களை விட பெண்கள் குறைவாக ஊழல் செய்வதாக’ பெண்கள் அதிகம் நியமிக்கப்பட்டதற்கு பிரதமர் பாராளுமன்றத்தில் காரணம் கூறியுள்ளார். இது நாட்டின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளது.

கட்டுமானத் துறை அமைச்சராக இருந்த ஆயிஷா முகமது அந்நாட்டின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆபிரிக்காவில் ருவாண்டாவுக்கு அடுத்து சரிபாதி பெண் அமைச்சர்களை கொண்ட நாடாக எத்தியோப்பியா இடம்பிடித்துள்ளது. அதேபோன்று அபீ, அமைச்சர்களின் எண்ணிக்கையையும் 28 இல் இருக்கும் 20 ஆக குறைத்துள்ளார்.

கடந்த ஏப்ரலில் பிரதமர் பதவியை ஏற்றது தொடக்கம் அவர் நாட்டில் பாரிய சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.


Add new comment

Or log in with...