3rd ODI: SLvENG; மழையால் போட்டி ஆரம்பிக்க தாமதம் | தினகரன்

3rd ODI: SLvENG; மழையால் போட்டி ஆரம்பிக்க தாமதம்

 

குசல் பெரேராவுக்கு பதில் குசல் மெண்டிஸ்

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, சீரற்ற வானிலை காரணமாக ஆரம்பமாக தாமதமாகியுள்ளது.

கண்டி, பல்லேகலை மைதானத்தில் பகலிரவு போட்டியாக, இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாக இருந்த குறித்த போட்டியே இவ்வாறு, மழை காரணமாக ஆரம்பமாக தாமதமாகியுள்ளது.

குறித்த போட்டி கைவிடப்படும் நிலையே தற்போது நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் காயமடைந்த குசல் பெரேராவிற்கு பதிலாக, குசல் மெண்டிஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்து இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச போட்டியும் மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தம்புள்ளையில் இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி, டக்வொர்த் லூயிஸ் முறையில் 31 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. குறித்த போட்டியிலும் மழையின் ஆதிக்கம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள், ஒரு ரி20 போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...