தெபுவன பொலிஸ் கான்ஸ்டபிள் சேவையில் இணைப்பு | தினகரன்


தெபுவன பொலிஸ் கான்ஸ்டபிள் சேவையில் இணைப்பு

தெபுவன பொலிஸ் கான்ஸ்டபிள் சேவையில் இணைப்பு-Thebuwana Police Constable Reinstated to Service By IGP

 

தெபுவன பொலிஸ்  நிலையத்தில் கடமைபுரியும் கான்ஸ்டபிள் சனத் குணவர்தன மீண்டும்  சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

கடமைக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியை கையில் ஏந்தியவாறு அமைதியற்று செயற்பட்டதன் காரணமாக, அவர் சேவையில் இருந்து தற்காலிகமாக இடை  இடைநிறுத்தப்பட்டிருந்தார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைய, அவர் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

தான் கைது செய்த மண் லொறியை விடுவிக்குமாறு, தெபுவன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்ததாக கூறி, கடந்த ஒக்டோபர் 03 ஆம் திகதி தனது கடமைக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியை கையில் ஏந்தியவாறு கான்ஸ்டபிள் சனத் குணவர்தன அமைதியற்று செயற்பட்டதோடு, இத இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தான் தற்கொலை செய்யப் போவதாகவும் அவர் மிரட்டல் விடுத்திருந்தார். சம்பவத்தின் போது அவரது கையிலிருந்த துப்பாக்கியிலிருந்து துப்பாக்கிச் சூடும் இடம்பெற்றது. ஆயினும் இதன்போது எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உதவியின் மூலம் அவர் கைது செய்யப்பட்டு, மத்துகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில், கடந்த வெள்ளிக்கிழமை (12) பொலிஸ் விசேட விசாரணை பிரிவில் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இடம்பெற்ற முழு சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின்  விசேட விசாரணைப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார்.

இதேவேளை பொலிஸ் கான்ஸ்டபிள், சனத் குணவர்தன மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்றைய தினம் (16) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்திருந்தனர்.

இதன்போது, அவரது பொருளாதார நிலை மற்றும் அவரது குழந்தைகளின் கல்வி தொடர்பில் கருத்திற்கொண்டு, ஜனாதிபதியினால் அவருக்கு,  ரூபா 10 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...