கருணாநிதி இருந்தபோது கிடைத்த மரியாதை இப்போது இல்லை: கமல் | தினகரன்

கருணாநிதி இருந்தபோது கிடைத்த மரியாதை இப்போது இல்லை: கமல்

திராவிடக்கட்சிகள் அங்கீகரிக்காமல் போனால் அதுப்பற்றி எனக்கு கவலையில்லை. அது அவர்களின் பெருந்தன்மையின்மையை காட்டுகிறது என்று கமல் பேட்டி அளித்தார்.

திராவிடக்கட்சிகள் உங்களை அங்கீகரிக்க மறுக்கிறார்களே?

நான் மக்களை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறேன். கட்சிகளை நோக்கி போவதில்லை. அங்கு நல்ல வரவேற்பு உள்ளதாக நினைக்கிறேன். அதை நோக்கி போவதுதான், இவர்களை பற்றி ரொம்ப கவலைப்பட்டால் வேலைக்கு இடைஞ்சலாக இருக்கும்.

அவர்கள் அங்கீகாரத்தை எதிர்ப்பார்க்கவில்லை. பெரியவர்கள் இருந்தபோது எனக்கு கொடுக்கவேண்டிய அனைத்து மரியாதையையும் கொடுத்துக்கொண்டிருந்தார். இப்போது உள்ளவர்கள் அதை தர மறுத்தால் அது அவர்களின் பெருந்தன்மையின்மையைக் காட்டுகிறது.

மக்கள் பிரச்சினைகளுக்கு காரணம் திராவிடக்கட்சிகள் என்று கூறுகிறீர்களா?

பல முறை அதைக் கூறிவிட்டேன். மறுபடியும் மறுபடியும் வெந்தப்புண்ணில் வேலைப்பாய்ச்ச வேண்டாம்.


Add new comment

Or log in with...