பட்டப்பகலில் முச்சக்கர வண்டியில் யுவதி கடத்தல்; யாழில் சம்பவம் | தினகரன்

பட்டப்பகலில் முச்சக்கர வண்டியில் யுவதி கடத்தல்; யாழில் சம்பவம்

பட்டப்பகலில் முச்சக்கர வண்டியில் யுவதி கடத்தல்; யாழில் சம்பவம்-Women abducted in Jaffna


யாழில். முச்சக்கர வண்டியில் வந்த இளைஞர்களால் யுவதி ஒருவர் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த சம்பவம் இன்று (16) செவ்வாய்க்கிழமை மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அது குறித்து மேலும் தெரியவருவதாவது , 

யாழ். செம்மணி பகுதியில் (யாழ். வளைவுக்கு) அருகில் வைத்து, வீதியால் சென்ற யுவதி ஒருவரை, முச்சக்கர வண்டியில் வந்த இளைஞர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.  

அதனை வீதியில் சென்றவர்கள் அவதானித்ததை அடுத்து, குறித்த முச்சக்கர வண்டியை மடக்கி பிடிப்பதற்கு துரத்தி சென்றுள்ளனர். இதன்போது கடத்தல்கார்கள் முச்சக்கர வண்டியில் மிகவேகமாக பயணித்துள்ளனர். 

இதன்போது, ஆடியபாதம் வீதி ஊடாக, வாகன நெரிசல்கள் அதிகமான கல்வியங்காட்டு சந்தி , மற்றும் திருநெல்வேலி சந்தி உள்ளிட்ட பகுதிகள் ஊடாக மிக வேகமாக முச்சக்கர வண்டியில் சென்ற சந்தேகநபர்கள் பயணித்துள்ளதுள்ளனர். 

அவர்களை மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்றவர்களும், தொடர்ந்து சுமார் 4 கிலோ மீற்றர் தூரத்திற்கு அவர்களை பின்தொடர்ந்த வேளையில், யாழ். மருத்துவ பீட வளாகத்திற்கு முன்பாக வைத்து, கடத்தி செல்லப்பட்ட பெண்ணின் ஆடை கழட்டி எறியப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, முச்சக்கர வண்டியை பின் தொடர்ந்து சென்றவர்கள் அதற்கு மேல் தொடர்ந்து செல்லாது அவ்விடத்தில் நின்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து, முச்சக்கர வண்டி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

அதேவேளை குறித்த முச்சக்கர வண்டி, நீர்வேலி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருடையது என, விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.

(யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன்)

 


Add new comment

Or log in with...