ஊழல் செய்யாதவர்களுடன் கூட்டணி | தினகரன்

ஊழல் செய்யாதவர்களுடன் கூட்டணி

யாருடன் கூட்டணி அமைப்பீர்கள் என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல், ஊழல் செய்யாதவர்களுடன் கூட்டணி வைப்பேன் என்றார்.

சென்னையில் அவர் மேலும் நிருபர்களிடம் பேசியதாவது: நான் மக்களை நோக்கி செல்கிறேன். எனக்கென அரசியல் தலைவர்கள் மத்தியில் மதிப்புள்ளது. என்னை மதிக்க தவறுவது என்பது அவர்களின் பெருந்தன்மை இன்மையே காட்டுகிறது. போராட்டம் என்பது கனமான வார்த்தை, சட்ட ரீதியாக போராடுவோம்.

கூட்டணி குறித்து நான் இப்போது முடிவு செய்ய முடியாது. மத்திய அரசு என்பது ஒன்று இருந்தே தீரும். ஊழல் செய்த கட்சியினருடன் எங்களுக்கு கூட்டணி இல்லை. ஊழல் யார் செய்தார்கள் என்பது முக்கியம். தாத்தா செய்த ஊழலுக்கு பேரனை காரணம் சொல்ல முடியாது.

நான் யாரையும் நம்பி இல்லை. மக்கள் என்னோடு இருக்கின்றனர். உறுப்பினர் சேர்க்கை நன்றாக நடக்கிறது. கோவை கல்லூரியில் பகவத்சிங் தொடர்பாக மாணவர்கள் கொண்டாட்டம் என்பது என்னை பொறுத்தவரை தவறானது அல்ல. மாணவியை இடைநிறுத்தம் செய்தது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு கமல் கூறினார்.


Add new comment

Or log in with...