சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு | தினகரன்

சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளதாகவும் அடுத்தமாதம் (நவம்பர்) இச்சந்திப்பு நிகழ உள்ளதாகவும் இந்தியாவுக்கான சீன தூதர் அறிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் இராணுவ வீரர்களுக்கான இந்தியா- சீனா கூட்டு இராணுவ பயிற்சி முகாம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்தியாவுக்கான சீன தூதர் லுயா ஜாவோஹூய் பேசியதாவது: ஆர்ஜென்டினாவில் அடுத்த மாதம் நடக்கும் 'ஜி-20' மாநாட்டில் கலந்து கொள்ளும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்திய பிரதமர் மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இது இந்தியா, சீன உறவை மேலும் வலுப்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர்கொள்ள இந்தியா, சீனா இணைந்து செயல்பட வேண்டும் என சமீபத்தில் சீனா தெரிவித்திருந்த நிலையில் இச்சந்திப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...