போர்த்துக்கலில் கடும் சூறாவளி: மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்பு | தினகரன்

போர்த்துக்கலில் கடும் சூறாவளி: மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்பு

ஐரோப்பிய நாடான போர்த்துக்கலில் ‘லெஸ்லி’ சூறாவளி தாக்கியதையடுத்து அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் மத்திய மற்றும் வடக்கு போர்த்துக்கல் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சூறாவளியின் தாக்கத்தால் தலைநகர் லிஸ்பனில் அதிகமான மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன.

‘லெஸ்லி’ புயலால் மணிக்கு 176 கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது. மேலும் மழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பலத்த மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் சூறைக்காற்றால் இதுவரை 27 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 60க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தலைநகர் லிஸ்பன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வெளியே பலத்த காற்று வீசுவதால் வீடுகளில் உள்ள மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...