வட கொரிய விஜயத்திற்கு பாப்பரசர் பிரான்சிஸ் திட்டம் | தினகரன்

வட கொரிய விஜயத்திற்கு பாப்பரசர் பிரான்சிஸ் திட்டம்

பாப்பரசர் பிரான்சிஸ் அடுத்த மாதங்களில் வட கொரியாவுக்கு வருதை தரவிருப்பதாக தென் கொரிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்ப வட கொரியா வெளி உலகுடன் தொடர்புபடுவதற்கான மற்றொரு காரணியாக இது பார்க்கப்படுகிறது.

வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் கடந்த வாரம் பாப்பரசரை தமது நாட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார்.

“அடுத்த கோடை காலத்தில் பாப்பரசர் வட கொரியா வருவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகிறது” என்று தென் கொரிய ஜனநாயகக் கட்சி தலைவர் லீ ஹே சான் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் பற்றிய செய்தி மூலத்தை லீ கூறாதபோதும், இந்த விஜயமானது வட கொரியாவுக்கான பாப்பரசர் ஒருவரின் முதல் விஜயமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

வட கொரிய மற்றும் வத்திக்கான் இடையே உத்தியோகபூர் இராஜதந்திர உறவுகள் இல்லை. அரச செயற்பாடுகளுக்கு நெருக்கடி இல்லாத வகையில் வட கொரியாவில் மதச் சுதந்திரத்தை அரசியலமைப்பு உறுதி செய்துள்ளது.

எனினும் அரச கட்டுப்பாட்டிலான வழிபாட்டுத் தலங்கள் தவிர்த்து வேறு மதச்செயற்பாடுகளுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...