டியான்ஜின் ஓபன் கார்சியா வசம் | தினகரன்

டியான்ஜின் ஓபன் கார்சியா வசம்

டியான்ஜின் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா கிண்ணத்தை கைப்பற்றினார்.

பரபரப்பான இறுதிப் போட்டியில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவுடன் நேற்று முன்தினம் மோதிய கார்சியா, டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டில் 7–6 (9–7) என வென்று முன்னிலை பெற்றார்.

அதே வேகத்துடன் 2ஆவது செட்டில் அதிரடியாக விளையாடி பிளிஸ்கோவாவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த அவர் 7–6 (9–7), 6–3 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி சம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இப்போட்டி 1 மணி, 42 நிமிடத்துக்கு நீடித்தது. நடப்பு பருவத்தில் கார்சியா வென்ற முதல் டபுள்யு.டி.ஏ பட்டம் இதுவாகும்.


Add new comment

Or log in with...