நடாலின் முதலிடத்தை நெருங்கும் ஜோகோவிச் | தினகரன்

நடாலின் முதலிடத்தை நெருங்கும் ஜோகோவிச்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற இப்போட்டியின் அரையிறுதிச்சுற்று ஜோகோவிச், ஜெர்மனியின் அலெக்சாண்டர் வெரேவை வென்றிருந்தார். மற்றொரு அரையிறுதியில் குரோஷிய வீரர் போர்னா கோரிக், உலகின் இரண்டாம் நிலை வீரர் பெடரரை வீழ்த்தினார்.

இருவருக்கும் இடையிலான இறுதி ஆட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் 6–3, 6–4 என்ற நேர் செட்களில் ஜோகோவிச் வென்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 14 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற அவர் தொடர்ந்து 18 ஏ.டி.பி போட்டிகளில் பட்டம் வென்றுள்ளார். பெடரரிடம் இருந்து இரண்டாம் இடத்தை கைப்பற்றிய ஜோகோவிச், விரைவில் நடால் வசம் உள்ள உலகின் முதல் நிலை வீரர் இடத்தையும் கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஜோகோவிச் வெல்லும் நான்காவது ஷாங்காய் மாஸ்டர்ஸ் பட்டமாகும்.


Add new comment

Or log in with...