துணிச்சலான வேடத்தில் சமந்தா | தினகரன்


துணிச்சலான வேடத்தில் சமந்தா

துணிச்சலான வேடத்தில் சமந்தா-Super Deluxe: Samantha Akkineni as Vaembu

 

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் சமந்தா துணிச்சலான வேடத்தில் நடித்திருப்பதாக படத்தின் இயக்குநர் தெரிவித்தார்.

ஆரண்ய காண்டம் படம் மூலம் இந்திய அளவில் கவனிப்பை பெற்றவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இயக்கும் படம் சூப்பர் டீலக்ஸ்.

படத்தில் ஷில்பா என்னும் திருநங்கை வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். சமந்தா வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி, பகவதி பெருமாள் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

படத்தை தயாரித்து இயக்கி இருக்கும் தியாகராஜன் குமாரராஜா படம் பற்றி கூறும்போது ‘சமந்தா இடம்பெறும் காட்சியில் தான் படம் தொடங்கும். மிகவும் துணிச்சலான காட்சி அது. முக சுளிப்பே இல்லாமல் இயல்பாக நடித்துக்கொடுத்தார். இந்த படத்தின் கதையை ஓரிரு வரிகளில் கூற முடியாது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 13 கதாபாத்திரங்கள் இணையும் புள்ளிகள் தான் கதை.

ஒருவரது வாழ்க்கை மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதே திரைக்கதை. படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித அனுபவத்தை தரும். இந்த படம் ஆந்தாலஜி வகையை சேர்ந்தது என்று செய்தி வெளியானது. அப்படி இல்லை. ஒரே கதை தான். சில மணி நேரங்களில் நடக்கும் கதை’ என்று அவர் கூறினார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்துக்கு பி.எஸ்.வினோத், நீரவ் ஷா இருவரும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.

 


Add new comment

Or log in with...