கைதிகள் கொலை; முன். சிறை ஆணையாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் | தினகரன்

கைதிகள் கொலை; முன். சிறை ஆணையாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

கைதிகள் கொலை; முன். சிறை ஆணையாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்-Welikada Prison Massacre-2012-Emil Ranjan Lamahewa Re Remand

 

முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று (16) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவரை, எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த 2012 நவம்பர் 09 ஆம் திகதி ஏற்பட்ட மோதலில் 27 கைதிகள் பலியான சம்பவம் தொடர்பில் முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ ஆகிய இருவரும் இவ்வருடம் (2018) மார்ச் மாதம் CID யினால கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபர்கள் ஒருவரான பொலிஸ் போதை தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ கடந்த செப்டெம்பர் 25 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...