பாடசாலையில் திருட்டு; மடக்கிப் பிடித்த பொலிசார் | தினகரன்

பாடசாலையில் திருட்டு; மடக்கிப் பிடித்த பொலிசார்

பாடசாலையில் திருட்டு; மடக்கிப் பிடித்த பொலிசார்-Mannar School Robbery-Suspects Arrested

 

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில்  இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட காரைநகர் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை 08 ஆம் திகதி பாடசாலையின் அலுவலகத்தின் கூரை பிரித்து உள்ளே இறங்கிய திருடர்கள் அங்கிருந்த  ரூபா 82 ஆயிரத்து 610 ரூபா பெறுமதியான பொருட்களை திருடி சென்றிருந்தனர்.

இச்சம்பவத்தில் கணிணித் தொகுதி, அதனுடன் இணைந்த மைக், ஹெட்போன் மற்றும் மின் கேத்தல், அம்பிலிபையர், றேடியோக்கள், ஆய்வுகூட உபகரணங்கள் உட்பட களஞ்சிய அறையில் இருந்த 53 ரின் மீன்கள் என்பவை திருடப்பட்டிருந்தன.

இச்சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் பாடசாலை நிர்வாகத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

விசாரணைகளை முன்னெடுத்திருந்த பிரதம பொலிஸ்பரிசோதகர் தலைமையிலான பொலிஸார், சந்தேகநபர்களை இனங்கண்டு கைது செய்திருந்தனர்.

இதில் இருவர் கடந்த வெள்ளிக்கிழமை (12) கைது செய்யப்பட்ட நிலையில் தம்பாட்டி பகுதியினை சேர்ந்த மேலும் ஒரு நபரை ஊர்காவற்றுறை பொலிஸார் தேடி வருகின்றனர்.

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், சந்தேகநபர்களை ஊர்காவற்துறை நீதவான் நிதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)

 


Add new comment

Or log in with...