வெலிக்கடை கைதிகள் கொலை; பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜவவுக்கு பிணை | தினகரன்

வெலிக்கடை கைதிகள் கொலை; பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜவவுக்கு பிணை

பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜவவுக்கு பிணை-Niyomal Rangajewa Released on Bail

 

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் 27 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரால் முன்வைக்கப்பட்ட பிணை மனு, மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (25) எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன இதனை அறிவித்துள்ளார்.

அதற்கமைய ரூபா 2 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டார். மேலும் அவருக்கு வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 09 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட கலகத்தின்போது, 27 சிறைக்கைதிகள் கொல்லப்பட்டிருந்தனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவ ஆகியோர் கடந்த மார்ச் 28ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

கடந்த ஆறு மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர்கள் இருவரில் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவ தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் சந்தேகநபர்கள் இருவராலும் முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...