Friday, March 29, 2024
Home » இலங்கையில் 5 வருடங்களை நிறைவு செய்த Uber Eats

இலங்கையில் 5 வருடங்களை நிறைவு செய்த Uber Eats

- 32 மில்லியன் விநியோகங்களுடன் தொடர்ந்தும் சிறப்பாக பயணிக்கும்

by Rizwan Segu Mohideen
November 30, 2023 11:17 am 0 comment

இலங்கையின் மிகவும் பிரபலமான உணவு மற்றும் மளிகைப்பொருட்கள் விநியோக செயலியான Uber Eats, நாட்டில் தனது சேவைகளை வழங்குவதில் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. கொழும்பு, கண்டி, காலி உள்ளிட்ட இலங்கையிலுள்ள 6 மாவட்டங்களில் கிடைக்கும் இந்த செயலி, கடந்த காலங்களில், இலங்கையில் 32 மில்லியனுக்கும் அதிகமான விநியோகங்களை மேற்கொள்ள உதவியுள்ளது.

இந்த சாதனை இலக்கினைக் குறிக்கும் வகையில், Uber Eats தனது வெற்றியில் விநியோக சேவையாளர்கள் மற்றும் வணிகக் கூட்டாளர்களின் வகிபாகத்தை அங்கீகரித்துள்ளது. அவர்களின் இலக்குகளை அடைய அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆதரவளிக்கும் முயற்சிகள் தொடர்பில் அறிவித்துள்ளது.

இந்தத் தருணத்தில், Uber Eats ஆனது ‘Uber Delivery Scholar’ திட்டத்தின் மூன்றாவது பதிப்பை அறிவித்துள்ளது. இது விநியோக சேவையாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் மற்றும் பாடசாலை உபயோகப் பொருட்களை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை, தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளையின் கல்வி செயல்திறன் மதிப்பீடு செய்யப்பட்டு, சிறப்பான செயல்திறன் கொண்டவர்களுக்கு அவர்களின் பாடசாலைப்படிப்பு முடிவடையும் வரை உதவிகளைப் பெற்றுக்கொள்வது உறுதிப்படுத்தப்படுகின்றது. இந்த ஆண்டு, 300 விநியோக சேவையாளர்களின் பிள்ளைகளுக்கு இலவச புலமைப்பரிசில்கள் மற்றும் கற்றல் துணைச்சாதனங்கள் வழங்கப்பட்டன. சிறந்த கல்விப்பெறுபேறு மற்றும் விளையாட்டு சாதனைகளை நிலைநாட்டிய 2 பிள்ளைகளுக்கு முறையே புலமைப்பரிசில் மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்கான வவுச்சர் வழங்கப்பட்டது. Uber Delivery Scholar திட்டத்தின் வெற்றிக்கு சான்றாக, கடந்த காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 85% க்கும் அதிகமான பிள்ளைகள், கல்வியில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு அடுத்த ஆண்டுக்குத் தகுதி பெற்றுள்ளனர். அதிக ஈடுபாடு கொண்ட விநியோக சேவையாளர்களை பணப் பரிசுகள் உள்ளிட்ட விசேட விருதுகளுடன் நிறுவனம் அங்கீகரித்துள்ளது.

Uber Eats அதன் வளர்ந்து வரும் வணிகக் கூட்டாளர்களின் வலையமைப்பு மற்றும் இலங்கையில் நிறுவனத்தின் பயணத்தில் அவர்களின் முக்கிய பங்களிப்பைக் கொண்டாடியது. 50 வணிக கூட்டாளர்களுக்கு அவர்களின் வளர்ச்சிக்கு உதவும் துறைகளில் சான்றிதழ் கற்கைநெறிகளைத் தொடர புலமைப்பரிசில் மானியங்கள் மூலம் கல்வி உதவிப்பரிசு வழங்கப்பட்டது. சந்தைப்படுத்தல், நிதி மற்றும் நிர்வாக திட்டமிடல், சமூக ஊடகங்களின் பயன்பாடு, வணிக மேம்பாடு மற்றும் புத்தாக்கம், நிர்வாக ஆட்சி மற்றும் இணக்கம் போன்றவை டிப்ளோமா கற்கைநெறிகளுக்கான கவனம் செலுத்தப்படும் துறைகளாகும். கடந்த 5 ஆண்டுகளில், Uber Eats தனது வெற்றியை பல வணிக கூட்டாளர்களுடன் பகிர்ந்துள்ளதுடன், அவர்கள் வீட்டு மட்டத்திலான சமையலறைகளில் இருந்து பல கிளைகளைக் கொண்ட உணவகங்கள் வரை இத்தளம் வழங்கிய அனுபவ வெளிப்பாடு, பரிமாணம் மற்றும் ஆதரவுடன் வளர்ச்சி கண்டுள்ளனர்.

இலங்கையில் Uber Eats இன் பயணம் குறித்து கருத்து தெரிவித்த Uber Eats Sri Lanka இன் பொது முகாமையாளர் வருண் விஜேவர்தன அவர்கள், கடந்த ஐந்து வருடங்களாக Uber Eats பெற்றுள்ள அன்பும், அரவணைப்பும் வியக்கத்தக்கது என்பதுடன் சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொள்ளக்கூடியது. விநியோக சேவையாளர்கள் மற்றும் வணிக கூட்டாளர்கள் Uber Eats ஐ இலங்கையில் அனைத்து இல்லங்களிலும் உச்சரிக்கப்படும் நாமமாக நிலைநிறுத்துவதற்கு அயராது உழைத்துள்ளனர். அவர்களின் முயற்சிகளை நாங்கள் அங்கீகரித்து, நாங்கள் சேவை செய்யும் சமூகத்திற்கு எம்மால் முடிந்த வழியில் ஆதரவளிக்கிறோம். விநியோக சேவையாளர்களின் பிள்ளைகளுக்கான பாடசாலை புலமைப்பரிசில்கள் மற்றும் வணிக கூட்டாளர்களுக்கான பிரத்தியேகமயமான டிப்ளோமா கற்கைநெறிகள் அவர்களின் வாழ்க்கையின் இலக்குகளை அடைவதற்கு அவர்களை ஒரு படி மேலே கொண்டு செல்லும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று குறிப்பிட்டார்.  

Uber Eats கடந்த ஐந்து வருடங்களாக சவாலான காலங்களில் இலங்கை சமூகத்திற்கு தொடர்ந்து சேவை செய்து வந்துள்ளது. அதன் முதல் வருடத்தில் இடம்பெற்ற சோகமான உயிர்த்தெழுந்த ஞாயிறு (ஈஸ்டர்) தாக்குதல்கள், அடுத்தடுத்த பொது முடக்கங்கள் உள்ளிட்ட கொவிட் பாதிப்பு மற்றும் சமீபத்திய பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்கு மத்தியில், Uber Eats தனது வாடிக்கையாளர்கள், விநியோக சேவையாளர்கள், வணிக கூட்டாளர்கள் மற்றும் பரந்த சமூகத்திற்கு ஆதரவாக பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

சமீபத்தில், இலங்கையில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்துடன் (UNDP) Uber கூட்டுசேர்ந்ததுடன், தனது விநியோக சேவையாளர்கள், வணிகக் கூட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர் தளம் உள்ளிட்ட வலையமைப்பின் மூலம் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு (SGBV) எதிராக குரலெழுப்புவதற்கும், வாதிடுவதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.  

Uber Eats தொடர்பான விபரங்கள்
மக்களை ஒரு பொத்தானை அழுத்தி, உள்ளூர் உணவகங்கள் மற்றும் மளிகைக் கடைகளில் இருந்து தமக்கு தேவையான உணவுகள், மளிகைப் பொருட்கள் மற்றும் பலவற்றை கோரி, நம்பகத்தன்மையுடனும், விரைவாகவும் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு இடமளிக்கின்றது. 2018 ஆம் ஆண்டு இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, Uber Eats ஆனது Uber இன் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் விநியோக சேவை நிபுணத்துவத்தை பல நகரங்களுக்குச் சேவை செய்வதற்கும், மளிகைப் பொருட்களை ஒரே நாளில் வழங்குதல் மற்றும் நிலைபேணத்தகு வழிமுறையிலான விநியோகங்களை அறிமுகப்படுத்துதல் போன்ற புதிய அறிமுகங்களுடன் அதன் இயங்குதள அனுபவத்தை மேம்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT