பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து; சுமார் 50 பேர் காயம் | தினகரன்

பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து; சுமார் 50 பேர் காயம்

பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து; சுமார் 50 பேர் காயம்-Private Bus-SLTB Bus Accident-50 Injured
(வைப்பக படம்)

 

தனியார் பஸ் ஒன்றும், இ.போ.ச. பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று (12) நண்பகல் அளவில் அம்பாந்தோட்டை வெல்லவாய பிரதான வீதியில் லுணுகம்வெஹர புதிய பஸ்  தரிப்பிடத்திற்கு அருகில் மாத்தறையிலிருந்து  அம்பாறை நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்றும் தெஹியத்தகண்டியிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும், நேருக்கு நேர்  மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

விபத்தில் இரு பஸ்களிலும் இருந்த சாரதிகள் உள்ளிட்ட சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தோர், லுணுகம்வெஹர, தெம்பருவெவ, அம்பாந்தோட்டை  வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, ருவன் குணசேகர தெரிவித்தார்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

 


Add new comment

Or log in with...