வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சமர்ப்பிப்பு | தினகரன்

வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சமர்ப்பிப்பு

வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சமர்ப்பிப்பு-Appropriation Bill for the Year 2019 Submitted in Parliament

 

(மகேஸ்வரன் பிரசாத்)

2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சபையில் இதனை சமர்ப்பித்தார்.

கடன்களுக்கான ஒதுக்கீடு உள்ளடங்கலாக அரசாங்கத்தின் மொத்தச் செலவீன ஒதுக்கீடு ரூபா 4376 பில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளதோடு,
துண்டு விழும் தொகை ரூபா 644 பில்லியன் எனவும் கணக்கிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சுக்கே அதிக நிதியாக ரூபா 306 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. (கடந்த வருடம் (ரூபா 290 பில்லியன்)

கல்வி அமைச்சுக்கு ரூபா, 105 பில்லியன், சுகாதார அமைச்சுக்கு ரூபா 185 பில்லியன், பொதுநிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கு ரூபா 295 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளன.

வரவுசெலவுத்திட்டத்திட்ட இரண்டாம் வாசிப்பை எதிர்வரும் நவம்பர் 05 ஆம் திகதி நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

ஆயினும் வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின், ஒரு மாதத்தின் பின்னரே இரண்டாம் வாசிப்பு விவாதம் நடாத்தப்பட வேண்டும் என, எதிர்க்கட்சியின் பிரதம கெரடா அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து குறித்த திகதி தொடர்பில் கலந்துரையாடி முடிவொன்றுக்கு வர முடியும் என சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றம் மீண்டும் நாளை கூடவுள்ளது.

 


Add new comment

Or log in with...