மேன்முறையீடு தள்ளுபடி; துமிந்த சில்வா உள்ளிட்ட மூவரின் மரண தண்டனை உறுதி | தினகரன்

மேன்முறையீடு தள்ளுபடி; துமிந்த சில்வா உள்ளிட்ட மூவரின் மரண தண்டனை உறுதி

மேன்முறையீடு தள்ளுபடி; துமிந்த சில்வா உள்ளிட்ட மூவரின் மரண தண்டனை உறுதி-Duminda Silva & 3 others Supreme Court reaffirmed the death penalty
(படங்கள்: நிரோஷ் பட்டேபொல)

பாரத லக்ஷ்மன் உள்ளிட்ட நால்வரின் கொலை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட மூவரின் மரண தண்டனையை உறுதிப்படுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், அதனை நடைமுறைப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் குறித்த மூவரினதும் மனுவை தள்ளுபடி செய்வதாகவும் அறிவித்துள்ளது.

மேன்முறையீடு தள்ளுபடி; துமிந்த சில்வா உள்ளிட்ட மூவரின் மரண தண்டனை உறுதி-Duminda Silva & 3 others Supreme Court reaffirmed the death penalty

அதற்கமைய அவர்களுக்கு மீண்டும் இது தொடர்பில் மேன்முறையீடு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் 08 ஆம் திகதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர துப்பாக்கிச் சூட்டில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம்  தொடர்பில், மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை நீக்குமாறு கோரி துமிந்த சில்வா உள்ளிட்ட நால்வர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த  மேன்முறையீடு தொடர்பான தீர்ப்பு இன்று (11) அறிவிக்கப்பட்டது.

மேன்முறையீடு தள்ளுபடி; துமிந்த சில்வா உள்ளிட்ட மூவரின் மரண தண்டனை உறுதி-Duminda Silva & 3 others Supreme Court reaffirmed the death penalty

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில், ஆர். துமிந்த சில்வா, அநுர துஷார டி மெல், சமிந்த ரவி ஜயநாத், சரத் பண்டார ஆகிய  நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

குறித்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், துமிந்த சில்வாவுக்கான பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த முதலாம் இலக்க பிரதிவாதியான பொலிஸ் அதிகாரி அநுர துஷாச டி மெலை நிரபராதி என விடுதலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், புவனேக அலுவிகாரே, நலின் பெரேரா, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகிய ஐவர் அடங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வாதி மற்றும் பிரதிவாதிகளால், ஆறு நாட்களாக இடம்பெற்ற நீண்ட  விளக்கத்தின் பின்னர்  நீதிமன்றம் இத்தீர்ப்பை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேன்முறையீடு தள்ளுபடி; துமிந்த சில்வா உள்ளிட்ட மூவரின் மரண தண்டனை உறுதி-Duminda Silva & 3 others Supreme Court reaffirmed the death penalty

குறித்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களது உறிவினர்கள், அழுதவாறு அங்கிருந்து சென்றதை காணக்கூடியதாக இருந்தது.

முன்னாள் ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகராக கடமையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட 4 பேரை கொலை செய்தமை தொடர்பில் ஆர். துமிந்த சில்வா, அநுர துஷார டி மெல், சமிந்த ரவி ஜயநாத், சரத் பண்டார ஆகிய பிரதிவாதிகள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டனர்.

மேன்முறையீடு தள்ளுபடி; துமிந்த சில்வா உள்ளிட்ட மூவரின் மரண தண்டனை உறுதி-Duminda Silva & 3 others Supreme Court reaffirmed the death penalty

தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் தந்தையும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் கடந்த 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் 08 ஆம் திகதி முல்லேரியா பிரதேசத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.

மாகாண சபைத் தேர்தல் சமயத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், துமிந்த சில்வாவிற்கும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேன்முறையீடு தள்ளுபடி; துமிந்த சில்வா உள்ளிட்ட மூவரின் மரண தண்டனை உறுதி-Duminda Silva & 3 others Supreme Court reaffirmed the death penalty

குறித்த சம்பவத்தை அடுத்து  முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, 2011 நவம்பர் முதலாம் திகதி  சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்து செல்லப்பட்டதோடு,  அங்கிருந்து 2013 மார்ச் 05 ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு திரும்பினார்.

சிங்கப்பூரில் இருந்து இலங்கை வந்த துமிந்த சில்வா கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் (நவலோக) அனுமதிக்கப்பட்ட நிலையில்,  அன்றைய தினமே குறித்த வைத்தியசாலையில் வைத்து, பொலிஸ் குற்றவியல் விசாரணை திணைக்கள (CID) அதிகாரிகளால்  கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு (2013.03.05), அங்கு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டதாக, அப்போதைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேன்முறையீடு தள்ளுபடி; துமிந்த சில்வா உள்ளிட்ட மூவரின் மரண தண்டனை உறுதி-Duminda Silva & 3 others Supreme Court reaffirmed the death penalty

அவரது தலையில்  பாரிய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப் பட்டுள்ளதால் வைத்தியசாலையில் இருந்து வெளியில் சென்றால்,  கிருமிகள் நுழைந்து அவரது உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என வைத்தியர்கள் தெரிவித்ததாக, ஷானி அபேசேகர நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அதற்கமைய  குறித்த வைத்தியசாலைக்குச் சென்ற அப்போதைய கொழும்பு மேலதிக நீதவான் சந்துன் விதான, துமிந்த சில்வாவுக்கு மார்ச் 14 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிததார்.

அதன் பின்னர் அவருக்கு 2013 ஏப்ரல் 26 ஆம் திகதி பிணை கிடைத்ததைத் தொடர்ந்து, அதற்கு அடுத்த நாளான ஏப்ரல் 27ஆம் திகதி அவர் வைத்தியசாலையில் இருந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகளின் பின்னர் மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகளால், கடந்த 2014 செப்டெம்பர் மாதம், துமிந்த சில்வா உள்ளிட்ட நால்வருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதோடு,  அதில் ஒரு நீதிபதி சந்தேகநபர்கள்  அனைவரும் நிரபராதிகள் என விடுதலை  செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார்.

அதற்கமைய பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்புக்கமைய குறித்த நால்வருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...