அலோசியஸ், பலிசேன பிணை மேன்முறையீடு நிராகரிப்பு | தினகரன்

அலோசியஸ், பலிசேன பிணை மேன்முறையீடு நிராகரிப்பு

அலோசியஸ், பலிசேன பிணை மேன்முறையீடு நிராகரிப்பு-Arjun Aloysius-Kasun Palisena Bail Rejected by Court of Appeal

 

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரால் முன்வைக்கப்பட்ட மேன் முறையீட்டு பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிணை மனு இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கோட்டை நீதவான் நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றத்தால் அவர்களின் பிணை மனு  நிராகரிக்கப்பட்டு வழங்கப்பட்ட உத்தரவை மறுதலிக்கும் அளவுக்கு போதிய சட்ட ரீதியான காரணங்கள், அர்ஜுன் அலோசிய மற்றும்   கசுன் பலிசேன தரப்பினரால் முன்வைக்கப்படவில்லை என்பதால்  அவர்களது பிணை மனுவை  நிராகரிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதேவேளை குறித்த இருவரும் இன்றைய தினம் வரை விளக்கமறியல்  கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு இன்று மீண்டும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...