முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம் | தினகரன்

முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்-Three Wheeler Charge Increased

 

எரிபொருள் விலை அதிகரிப்பு அடுத்து முச்சக்கர வண்டி சங்கங்கள்  முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் அதிகரிக்க  தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

முச்சக்கரவண்டி சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை அடுத்து குறித்த தீர்மானத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய தற்போது உள்ள முதல் சில இதற்கான ஆரம்ப கட்டணம் ரூபாய் 60 மாற்றம் இல்லை எனவும் இரண்டாவது கிலோமீட்டருக்கு அறவிடப்படும் ரூபா 40 கட்டணத்தை ரூபா 50 ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய பெற்றோல் Octane 92 - ரூபா 149 இலிருந்து ரூபா 155 ஆக ரூபா 6 இனாலும், பெற்றோல் Octane 95 - ரூபா 161 இலிருந்து ரூபா 169 ஆக ரூபா 8 இனாலும், சுப்பர் டீசல் - ரூபா 133 இலிருந்து ரூபா 141 ஆக ரூபா 8 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் எரிபொருள் நிரப்பு  நிலையங்களில் நிலையங்களால் விநியோகிக்கப்படும் ஒட்டோ டீசல் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை (ரூபா 129) என்பது குறிப்பிடத்தக்தகது. ஆயினும் இலங்கை இந்திய  ஒயில் நிறுவனம் (LIOC) ஒட்டோ டீசல் விலையை ரூபா 123 இலிருந்து ரூபா 129 ஆக ரூபா 6 இனால் அதிகரித்துள்ளதோடு, சுப்பர் டீசல் விலையை ரூபா 133 இலிருந்து ரூபா 141 ஆக ரூபா 8 இனாலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து தொடர்பான  வாகனங்களின்  கட்டணங்களில் திருத்தத்தை ஏற்படுத்த தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை ஒன்றிணைந்த மாவட்ட பாடசாலை போக்குவரத்து சேவை சங்கத்தின்  தலைவர், எல்.எம்.ஏ. ஹரிஸ்சந்திர தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...