கென்ய பஸ் விபத்தில் குறைந்தது 50 பேர் பலி | தினகரன்

கென்ய பஸ் விபத்தில் குறைந்தது 50 பேர் பலி

கென்ய தலைநகர் நைரோபியில் இருந்து மேற்காக கிசுமு நகரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

பஸ் வண்டி தலைகீழாக கவிழ்ந்ததில் பலரும் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. பஸ் வண்டியின் சிதைவுக்குள் பலரும் சிக்கி இருந்ததால் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

“பஸ் வண்டியின் கூரை கழன்று வெளியே வீசப்பட்டுள்ளது” என்று உள்ளுர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்திருப்பதோடு விபத்துகள் நிகழும் ஆபத்தான இடம் ஒன்றில் பஸ் வண்டி பள்ளத்தில் சரிந்திருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று புதன்ழமை காலை வேளையில் இந்த விபத்து நிகழும்போது அந்த பஸ் வண்டியில் 52 பயணிகள் இருந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் சிறுவர்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

கென்யாவின் நெடுஞ்சாலை ஆபத்தானதாக இருப்பதோடு வீதிப் பாதுகாப்பில் மிக மோசமான நாடுகளில் ஒன்றாக கென்யாவை உலக சுகாதார அமைப்பு தரப்படுத்தியுள்ளது.


Add new comment

Or log in with...