9 ஓட்டங்களைப் பெற்ற மியன்மார் கிரிக்கெட் அணி | தினகரன்

9 ஓட்டங்களைப் பெற்ற மியன்மார் கிரிக்கெட் அணி

டி20 உலகக் கிண்ண தகுதிச்சுற்றில் வெறும் 10 பந்துகளில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மலேசிய கிரிக்கெட் அணி சாதனை படைத்துள்ளது.

கோலாலம்பூரில் டி20 உலகக் கிண்ண தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், மலேசியா – மியன்மார் இடையிலான ஆட்டம் ஒன்றில், மோசமான வானிலை காரணமாக ஆட்டம் 10.1 ஓவர்களாக குறைப்பட்டது.

இதை தொடர்ந்து முதலில் துடுப்பெடுத்தடிய மியன்மார் அணி 10.1 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 9 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதுதான் டி20 போட்டியில் பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த ஓட்டங்களாகும்.

இந்தப் போட்டியில் அதிகபட்சமாக மலேசிய பந்துவீச்சாளர் பவன்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி ஒரு ஓட்டம் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் பின் களமிறங்கிய மலேசிய அணி 10 பந்துகளில் வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Add new comment

Or log in with...