நடிகர் மன்சூர் அலிகானின் 3-வது மனைவி மீது தாக்குதல் | தினகரன்

நடிகர் மன்சூர் அலிகானின் 3-வது மனைவி மீது தாக்குதல்

2-வது மனைவியின் வாரிசுகள் மீது புகார்

நடிகர் மன்சூர் அலிகானின் 3-வது மனைவி, முகத்தில் இரத்தம் வடிந்த நிலையில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு வந்து தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகானுக்கு 3 மனைவிகள் உள்ளனர். இவர்கள் அனைவருடனும் மன்சூர் அலிகான் நுங்கம்பாக்கத்தில் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். மனைவிகளுக்கு இடையே அவ்வப்போது சண்டை ஏற்படுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. மன்சூர் அலிகானின் 2-வது மனைவி பேபி என்கிற ஹமீதா. இவர்களுக்கு லைலா அலிகான்(22) என்ற மகளும் 15 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மன்சூர் அலிகானின் 3-வது மனைவி வஹிதா.

நேற்று முன்தினம் ஏற்பட்ட குடும்ப தகராறில் லைலா அலிகானும் அவரது தம்பியும் சேர்ந்து இரும்பு கம்பியால் வஹிதாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் முகத்தில் இரத்தம் வடிந்த நிலையில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு வந்த வஹிதா, தன்னை தாக்கியவர்கள் மீதும் இந்த சம்பவம் நடந்த போது அதை தடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த மன்சூர் அலிகான், ஹமீதா ஆகியோர் மீதும் புகார் கொடுத்துள்ளார். பின்னர் வஹிதாவை அவருடைய சகோதரி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். இந்தச் சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து தகராறு காரணமாக சண்டை நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Add new comment

Or log in with...