லொறி, புகையிரதத்தில் மோதி விபத்து; இருவர் காயம் | தினகரன்

லொறி, புகையிரதத்தில் மோதி விபத்து; இருவர் காயம்

லொறி, புகையிரதத்தில் மோதி விபத்து; இருவர் காயம்-Lorry-Train Accident-Hikkaduwa Waulagoda-2 Injured

லொறி, புகையிரதத்தில் மோதி விபத்து; இருவர் காயம்-Lorry-Train Accident-Hikkaduwa Waulagoda-2 Injured

ஹிக்கடுவ, வவுலகொட புகையிரத கடவையில் லொறி ஒன்று புகையிரதத்தில் மோதியதில் இருவர் படுகாயமுற்றுள்ளனர்.

இன்று (04) பிற்பகல் 3.35 மணியளவில் மாத்தறையில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற  புகையிரதத்தில், லொறி ஒன்று  மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

புகையிரதத்தில் மோதுண்ட லொறி சுமார் 200 மீற்றர் அளவில் எழுத்து செல்லப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.  குறித்த   புகையிரத கடவையில் இதற்கு முன்னரும் இவ்வாறான விபத்து  ஏற்பட்டதாகவும் கார் ஒன்று புகையிரதத்தில் மோதியதில் இருவர் பலியானதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்து காரணமாக காயமடைந்த லொறியில் பயணித்த சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லொறி, புகையிரதத்தில் மோதி விபத்து; இருவர் காயம்-Lorry-Train Accident-Hikkaduwa Waulagoda-2 Injured

எண்ணெய் மற்றும் மருந்துப்பொருட்கள் ஏற்றி வந்த, தனியார் ஆயுர்வேத நிறுவனமொன்றுக்குச் சொந்தமான குறித்த லொறி, புகையிரதம் வருவதை அறிவிக்கும் சமிக்ஞை ஒளிர்ந்து கொண்டிருந்த நிலையில், குறித்த புகையிரதக் கடைவையை கடந்து சென்றதாக நேரில்  கண்ட பலர் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்து காரணமாக, கரையோர புகையிரத  போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக,  புகையிரத கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

லொறி, புகையிரதத்தில் மோதி விபத்து; இருவர் காயம்-Lorry-Train Accident-Hikkaduwa Waulagoda-2 Injured

லொறி, புகையிரதத்தில் மோதி விபத்து; இருவர் காயம்-Lorry-Train Accident-Hikkaduwa Waulagoda-2 Injured

(படங்கள்: லன்கிந்த நாணயக்கார)

Add new comment

Or log in with...