பேருவளையில் துப்பாக்கி சூடு; இளைஞர் படுகாயம் | தினகரன்

பேருவளையில் துப்பாக்கி சூடு; இளைஞர் படுகாயம்

பேருவளையில் துப்பாக்கி சூடு; இளைஞர் படுகாயம்-shooting at Beruwala youth injured


பேருவளை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று (03) இரவு 8.20 மணியளவில், பேருவளை, பன்னில, 80 ஏக்கர் பிரதேசத்தில் வைத்து, மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் மீது அடையாளம் தெரியாத ஆயுதம் தாங்கிய இருவரால் துப்பாக்கிச் சூட்டு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த துப்பாக்கிச்சூடு பெருக்கம் காரணமாக, காயமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்ற நபர், களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

காயமடைந்த நபர், முங்ஹேன, வலத்தற பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, பேருவளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 


Add new comment

Or log in with...