Tuesday, April 16, 2024
Home » COP28 மாநாட்டில் ‘காலநிலை நீதி மன்றத்தை’ ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி ரணில்

COP28 மாநாட்டில் ‘காலநிலை நீதி மன்றத்தை’ ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி ரணில்

- இந்திய பிரதமர் உள்ளிட்ட தலைவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

by Rizwan Segu Mohideen
December 2, 2023 2:18 pm 0 comment

காலநிலை மாற்ற பிரச்சினைகளுக்கு நீதியும் நியாயமானதுமான உணர்வுகளுடன் தீர்வு காண வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க COP28 மாநாட்டில் “காலநிலை நீதி மன்றத்தை” ஆரம்பித்து வைத்தார். குறித்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் வேலைத் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இங்கர் அண்டர்சன் (Inger Andersen) மற்றும் உகாண்டா சுகாதார அமைச்சர் வைத்தியர் திருமதி அசெங் ஜேன் ரூத் (Dr. Aceng Jane Ruth) ஆகியோர் ஜனாதிபதியுடன் இணைந்திருந்தனர்

துபாய் Expo City யில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடான COP28 இல் பங்கேற்கச் சென்றிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

நேற்றையதினம் (01) இடம்பெற்ற குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இதேவேளை, ஜனாதிபதிக்கும் கிரேக்க பிரதமர் கிர்யாகோஸ் மிட்ஸுடாக்ஸ் (Kyriakos Mitsotakis) இடையிலான இருதரப்பு சந்திப்பும் நேற்று (01) நடைபெற்றது.

இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்திக் கொள்வது தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் அவதானம் செலுத்தியிருந்ததோடு, விரைவில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி இதன்போது கிரேக்க பிரதமருக்கு அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டுபாயில் நடைபெறும் ஐ.நா. காலநிலை மாநாடான COP28இற்கு இணையாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான இருதரப்புச் சந்திப்பு இன்று (02) நடைபெற்றது.

இலங்கையின் பசுமை பொருளாதார மாற்றம் மற்றும் இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கமான IORA உடனான பிரான்ஸின் தொடர்புகளைப் பலப்படுத்திக்கொள்வது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அதேநேரம் இலங்கையில் காலநிலை தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு ஒன்றுபடுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோனுக்கு அழைப்பு விடுத்தார்.

டுபாயில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடான COP28 க்கு இணையாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வா (Luiz Inácio Lula da Silva) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சற்று முன்னர் நடைபெற்றது. வெப்ப வலய நாடுகளான இலங்கை மற்றும் பிரேசில் ஆகிய இரு நாடுகளையும் பாதிக்ககூடிய விடயங்களுக்குத் தீர்வு காண ஒன்றுபடுமாறு ஜனாதிபதி, பிரேசிலுக்கு அழைப்பு விடுத்தார்.

இது தொடர்பான செய்தி >>

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT