Thursday, March 28, 2024
Home » அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் நினைவுப் பேருரை – 2023

அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் நினைவுப் பேருரை – 2023

by Rizwan Segu Mohideen
December 2, 2023 6:14 am 0 comment

தெல்தோட்டைஊடகமன்றமும், அருள்வாக்கிஅப்துல் காதிர் கலை இலக்கியக் கழகமும் இணைந்து வை.எம்.எம்.ஏ. பள்ளேகம கிளையின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்திருந்த 2023ம் ஆண்டுக்கானஅருள்வாக்கிஅப்துல் காதிர் புலவர் நினைவுப் பேருரை நிகழ்வுகள் கடந்த வியாழக்கிழமை (30) கொழும்பு, வை.எம்.எம்.ஏ. கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.

‘மலையக வரலாறும்,ஈழத்து இலக்கியமும் ‘என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்தநினைவுப் பேருரை நிகழ்வினை காப்பியக்கோ டொக்டர் ஜின்னா ஷரிபுத்தீன் தலைமையேற்று நடாத்தி வைத்தார். இவ்வருடத்திற்கான நினைவுப் பேருரையினை ‘மலையகக் கவிதை இலக்கியச் செல்நெறியும், மலையக அடையாள உருவாக்கமும்’ எனும் தலைப்பில் மலையகஅரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர், எழுத்தாளர், சமூகசெயற்பாட்டாளர், பன்னூலாசிரியர் மற்றும் முன்னாள் பாராளுமன்றஉறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா நிகழ்த்தினார்.

இந்தநிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீம், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மர்ஹும் எஸ்.எம்.ஏ. ஹஸன் ஆசிரியர் (கல்விஅதிகாரி) எழுதிய அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் பற்றிய நூலை இரு முறைஅச்சிட்டு அதனை வெளியிட்ட கல்ஹின்னை தமிழ் மன்றத்திற்கு தெல்தோட்டை ஊடகமன்றமானது, ‘அருள்வாக்கி நேசன்’ விருது வழங்கி பாராட்டி கௌரவித்தது. மேலும்,அருள்வாக்கிஅப்துல் காதிர் கலை, இலக்கியக் கழகத்தினால் நடத்தப்பட்டமுகநூல் வாசகர்களுக்கான கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற கவிஞர்களுக்கு சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

ஏ.எஸ்.எம். பவாஸ்
செயலாளர்
தெல்தோட்டை ஊடக மன்றம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT