சாவகச்சேரி கொள்ளை; நிதி நிறுவன பெண் ஊழியர் உள்ளிட்ட மூவர் கைது | தினகரன்

சாவகச்சேரி கொள்ளை; நிதி நிறுவன பெண் ஊழியர் உள்ளிட்ட மூவர் கைது

சாவகச்சேரி கொள்ளை; நிதி நிறுவன பெண் ஊழியர் உள்ளிட்ட மூவர் கைது-

 

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர்ப் பகுதியிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் கத்தி முனையில் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தில் குறித்த நிறுவனத்தில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர்  கைதாகியுள்ளனர்.

குறித்த தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த செப்டெம்பர் 19 ஆம் திகதி காலை சுமார் 18 இலட்சத்து 91 ஆயிரத்து 21 ரூபா பணம் கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டிருந்தது.

வழமை போன்று காலையில், நிதி நிறுவன பணியாளர்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த பணத்தை வங்கியில் வைப்பிலிடுவதற்காக தயாரான நிலையில் அங்கு கத்தியுடன் உள்நுழைந்த இருவர் அங்கிருந்தோரை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையிட்டு சென்றனர்.

இதனையடுத்து, உடனடியாக சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த விசாரணையின் அடிப்படையில்குறித்த நிதி நிறுவனத்தில் பணியாற்றும் பெண், அவரது காதலன் என அறியப்படும் இளைஞனும் மற்றுமொருவரும் பொலிஸாரினால் நேற்றிரவு  (25) கைதாகியுள்ளனர்.

சாவகச்சேரி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(பாறுக் ஷிஹான் - புங்குடுதீவு குறுப் நிருபர்)
 


Add new comment

Or log in with...