ரொஹிங்கியருக்கு அமெரிக்கா 185 மில்லியன் டொலர் உதவி | தினகரன்

ரொஹிங்கியருக்கு அமெரிக்கா 185 மில்லியன் டொலர் உதவி

மியன்மார் இராணுவத்தின் தாக்குதலிலிருந்து தப்பியோடிய ரொஹிங்கிய மக்களுக்கு உதவ 185 மில்லியன் டொலர் வழங்க அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

தற்போது பங்களாதேஷில் புகலிடம் நாடியுள்ள ரொஹிங்கிய மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய அது உதவும் என ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி கூறினார்.

உணவு, தண்ணீர், சுகாதாரப் பராமரிப்பு உள்ளிட்டவற்றை வழங்க புதிய நிதி உதவும் என அவர் குறிப்பிட்டார்.

மியன்மார் அரசாங்கம், ரொஹிங்கிய மக்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஐ.நா சபையுடன் அமெரிக்காவும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் குற்றஞ்சாட்டியுள்ளன.

700,000க்கும் அதிகமான ரொஹிங்கிய மக்கள் பங்களாதேஷில் புகலிடம் தேடிச் சென்றுள்ளனர்.


Add new comment

Or log in with...