கிம்முடனான மற்றொரு சந்திப்புக்கு டிரம்ப் தயார் | தினகரன்

கிம்முடனான மற்றொரு சந்திப்புக்கு டிரம்ப் தயார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னுடன் மற்றொரு உச்சநிலை சந்திப்பை விரைவில் மேற்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

முதல் சந்திப்பைத் தொடர்ந்து பதற்ற நிலையைக் குறைப்பதில் அதீத முன்னேற்றம் கண்டதாக டிரம்ப் கூறினார். ஐக்கிய நாடுகள் சபையில் செய்தியாளர்களிடம் பேசியபோது கிம் தமக்கு எழுதிய கடிதம் பற்றி டிரம்ப் குறிப்பிட்டார்.

கிம் தம்மிடம் இரண்டாவது உச்சநிலைச் சந்திப்பை நடத்த கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அது விரைவில் நடைபெறும் என்றும் கூறினார் டிரம்ப்.

இரு தலைவர்களும் முதல்முறை கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்தனர்.


Add new comment

Or log in with...