போர்த்துக்கலுக்கு அப்பால் 400 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய கப்பலின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அது இந்த தசாப்தத்தின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என வர்ணிக்கப்படுகிறது. போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனுக்கு அருகே கப்பலின் சிதைவுகளை ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர்.
அதனருகே சமையலுக்குப் பயன்படுத்தப்படும் சுவையூட்டும் பொருட்களும் மட்பாண்டங்களும் காணப்பட்டன.
1575ஆம் ஆண்டுக்கும் 1625 ஆம் ஆண்டுக்கும் இடை யே கப்பல் மூழ்கியிருக்கும் என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இந்தியாவிலிருந்து மிளகு, கராம்பு உள்ளிட்ட சமயல் பொருட்கள் மற்றும் நறுமண பொருட்களை ஏற்றிக் கொண்டு திரும்ப சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஆசியாவுடன் போர்த்துக்கலின் வர்த்தகம் உச்சத்தில் இருந்த காலகட்டம் இதுவாகும்.
இதில் 9 பீரங்கிகள், போர்த்துக்கல் ஆயுதங்கள், சீனப் பீங்கான்கள், சில நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அடிமைகளை விலைக்கு வாங்க இந்த நாணயங்கள் பயன்படுத்தி இருக்கலாம் என நம்பப்படுகிறது.
Add new comment