எண்ணெய் விலை 4 ஆண்டுகள் இல்லாத அளவூக்கு அதிகாpப்பு | தினகரன்

எண்ணெய் விலை 4 ஆண்டுகள் இல்லாத அளவூக்கு அதிகாpப்பு

எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 81.48 டொலர்களாக கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் பெற்றுள்ளது. ஈரான் மீதான தடையை அடுத்து எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறு சவூதி அரேபியா மற்றும் ரஷ்யா மீது அமெரிக்கா விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

பிரெண்ட் மசகு எண்ணெய் 2014 நவம்பருக்குப் பின்னர் பீப்பாய் ஒன்று 81.48 டொலர்களால் நேற்று உயர்ந்திருந்தது.

அல்ஜீரியாவில் நடைபெற்ற எண்ணெய் நாடுகளின் கூட்டத்தில் எண்ணெய் விநியோகத்தின் அளவு குறித்து எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையிலேயே விலை அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது.

பிராந்தியத்தில் அமெரிக்கா இராணுவ பாதுகாப்பில் ஈடுபடுவதால் எண்ணெய் உற்பத்தி நாடுகள் கச்சா எண்ணெய் விலையை குறைந்த அளவில் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் வலியுறுத்தி இருந்தார்.

“மத்திய கிழக்கில் நாம் பாதுகாக்கும் நாடுகள் நாம் இல்லாமல் நீண்ட காலம் இருக்க முடியாத நிலையில் தொடர்ந்தும் எண்ணெய் விலையை உயரச் செய்கின்றன. அதனை நாம் ஞாபகத்தில் வைப்போம். ஒபெக் தற்போது எண்ணெய் விலையை குறைக்க வேண்டும்” என்று டிரம்ப் தனது ட்விட்டரில் எழுதியிருந்தார்.

ஒபெக்கின் முன்னணி நாடான சவூதி அரேபியா மற்றும் அந்த அமைப்புக்கு வெளியில் இருக்கும் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடான ரஷ்யா எண்ணெய் விலையை குறைக்கும் அமெரிக்காவின் கோரிக்கையை தொடர்ந்து நிராகரித்து வருகின்றன.

ஈரான் எண்ணெய் மீதான அமெரிக்காவின் தடை வரும் நவம்பர் 4 ஆம் திகதி அமுலுக்கு வரவுள்ள நிலையிலேயே எண்ணெய் விலையில் தளம்பல் ஏற்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...