பெண்கள் கரப்பந்தாட்டப்போட்டியில் வசாவிளான் வயவன் அணி வெற்றி | தினகரன்

பெண்கள் கரப்பந்தாட்டப்போட்டியில் வசாவிளான் வயவன் அணி வெற்றி

யாழ். மல்லாகம் ஸ்ரீ முருகன் ஐக்கிய விளையாட்டுக்கழகத்தின் 45 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பெண்கள் கரப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் வசாவிளான் வயவன் அணி வெற்றிபெற்றுள்ளது.

சுற்றுப்போட்டி கழக மைதானத்தில், கடந்த 23ஆம் திகதி ஆரம்பமாகியது. இந்தச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியும் அன்றைய தினமே நடைபெற்றது. இதில், வசாவிளான் வயவன் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து உரும்பிராய் கணேசா விளையாட்டுக்கழக அணி மோதியது.

மூன்று பகுதிகளைக் (செற்) கொண்டமைந்ததாக இந்த இறுதிப்போட்டி நடைபெற்றது. வசாவிளான் வயவன் அணி, முதல் இரண்டு பகுதிகளையும் (செற்) 25:21, 25:17 என்ற அடிப்படையில் வென்று சம்பியன் கிண்ணத்தை வென்றது.

வசாவிளான் வயவன் அணியின் ஏழிசை இறுதி போட்டியின் சிறந்த வீராங்கனையாகவும், உரும்பிராய் கணேசா அணியின் தர்சி தொடரின் சிறந்த வீராங்கனையாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

கொக்குவில் குறுப் நிருபர்


Add new comment

Or log in with...