இலங்கையின் அபிவிருத்திக்கு அமெரிக்கா 480 மில். டொலர் நன்கொடை | தினகரன்

இலங்கையின் அபிவிருத்திக்கு அமெரிக்கா 480 மில். டொலர் நன்கொடை

 

அமெரிக்க அரசின் மில்லேனிய சவால்களுக்கான கூட்டுத்தாபனம் இலங்கை அரசுக்கு 480 மில்லியன் அமெரிக்க டொலரை (8000 கோடி ரூபாய் அளவில்) அபிவிருத்தி நன்கொடையாக வழங்கத் தயாரென அக்கூட்டுத்தாபன பிரதான நிறைவேற்று அதிகாரி Brock Bierman தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் 73வது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்குபற்ற நியூயோர்க் நகருக்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று முன்தினம் (24) மாலை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவிததுள்ளார். இந்த நன்கொடை தொடர்பான வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் நாட்களில் ஐக்கிய நாடுகள் செனட் சபையின் அங்கீகாரத்துக்காக முன்வைக்கப்படவுள்ளதாக Brock Bierman கூறினார். செனட் சபையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் டிசம்பர் மாதமளவில் அதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமெனவும், அந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்வாரெனில் அது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறினார்.

அதற்கு இணக்கம் தெரிவித்த ஜனாதிபதி, நீண்டகாலமாக இலங்கைக்கு அமெரிக்க அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகச் செய்யும் உதவிக்கு நன்றி தெரிவித்தார். இலங்கைக்குப் பெற்றுக் கொடுக்கப்படும் புதிய அபிவிருத்திக்கான நன்கொடையை மிகவும் மதிப்பதாகக் கூறிய ஜனாதிபதி, இலங்கையின் போக்குவரத்து சேவை, மற்றும் வாகன நெரிசலை குறைப்பதற்கான திட்டத்திற்காக அந்த நிதியை முதலீடு செய்யவுள்ளதாகத் தெரிவித்தார்.

அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, திலக் மாரப்பன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நியூயோர்க்கிலிருந்து ரக்‌ஷன யந்த

 


Add new comment

Or log in with...